Friday, October 9, 2009

ஹக் ..... கில்மா ....ஹக் ....கில்பா !!!!

என்னோட புது Gtalk status message : ஹக் கில்மா ...ஹக் கில்பா !!!!

இதை பார்த்த நண்பர்கள் அனைவரும் சொல்லி வைத்ததுபோல் தவறாகவே புரிந்து கொண்டு கேள்வி கேக்கிறார்கள் .... Sample சில:
1) என்ன மாப்ள....ஹ்ம்ம்ம்ம் ...ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... (என்னடா கேக்க வர ????)
2) டேய், கேள்வி பட்டேன்...கில்மா...கில்பா ...நடத்து நடத்து (என்ன கொலைகாரன் ஆக்காத)

இதை போன்ற தொல்லைகளால் , கில்மா அண்ட் கில்பா பற்றி சொல்ல வேண்டிய கட்டயாம் வந்து விட்டது !!!!

இஸ்கூல் படிக்கிறப்போ வெட்டி தத்துவமும் நிறைய எழுதுவேன்...அப்பிடி எழுதிட்டு கடைசில "ஹக் கில்மா...ஹக் கில்பா " அப்டின்னு எழுதுவேன்.

ஒரு நாள் எங்க அம்மா கில்மாங்க்ற வார்த்தைய பார்த்து "ஏன்பா , நீ அல்-உம்மா ல சேர்ந்துட்டியானு" கேட்டாங்க , அப்போ இருந்து தத்துவமும் எழுதுறது குறைச்சுட்டேன்.

சாம்பிள் கு ஒன்னு

"மேல பாரு வானம் , கீழ பாரு பூமி, இதாண்டா வாழ்கை ..........
ஹக் கில்மா ... ஹக் கில்பா "

ஆள் கடத்தல் : Chapter Close

போனவர் திரும்பிவிட்டார் !!!! மற்ற விவரங்கள் கிடைத்தால் சொல்கிறேன் !!!!

Thursday, October 8, 2009

ஆள் கடத்தல் !!!!

நண்பனின் தந்தை பொது பணித்துறை உயர் அதிகாரியை இருக்கிறார். இன்று மதியம், சன் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த அம்மா, திடீரென்று என்னை அழைத்து அந்த FLASH News ஐ காட்டினார். அதில், மதுரையை சேர்ந்த அதிகாரி கடத்தல் என்று வந்தது , நண்பனின் நண்பனுக்கு போன் செய்தால் News Confirmed. நல்ல மனிதர், சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் !!!!

மனிதர் திரும்பி வரட்டும்....அப்புறம் இருக்குது கடதல்காரைங்களுக்கு ....மிச்சம் இருக்கபோற கொஞ்ச காலத்துக்கு ஏன்டா இவர கடத்துனொம்ணு நினைச்சு நினைச்சு வெறுத்து சாகபோறைங்க !!!!!!!!

Wednesday, October 7, 2009

உன்னை போல் ஒருவன் : தமிங்க்லிஷ் திரைபட விமர்சனம்

பல பேரு இந்த படத்த பத்தி பேசிட்டாங்க , எழுதிட்டாங்க, படமும் கிட்ட தட்ட வெற்றியடைஞ்சிடுசு, இதுக்கப்புறமும் ஒருத்தன் விமர்சனம் பண்ண வரான்னா அவன நீங்க எல்லோரும் பாராட்டித்தான் ஆகணும். அது வேற யாரும் இல்ல, நாந்தானுங்கோ !!!!!!!! (Build-up மட்டும் இல்லேன்னா நம்மள DOG கூட திரும்பி பாக்காது )

ஹிந்தி படத்தை காட்டிலும் Making ல கலக்கிட்டாங்க , மத்தபடி ஹிந்தி படத்துல வந்த தாக்கம் இதுல சுத்தமா இல்ல. அந்த படத்துல Nasurudeen shah என்னும் சாதரண மனிதன், அவன் கோவம், அதுதான் தெரிஞ்சுச்சு. ஆனா தமிழ் ல கமல் என்னும் "Lord" லபக்குதாஸ் தான் தெரிஞ்சாரு. கமலின் நான் பெரிய வெண்கலம் என்று சொல்லும் மற்றுமொரு படமாகத்தான் தெரிந்ததே தவிர, படத்தின் theme வெளிப்பட்ட மாதிரி தெரில்ல. இந்த படத்துக்கு Perfect Casting என்று பார்த்தால் பசுபதி as Common Man சரியாய் இருந்து இருக்கும்.

Apart from that, படம் உண்மையிலேயே மிரட்டி இருகிறார்கள். RED ONE கேமரா கொண்டு புகுந்து விளையாடி இருகிறார்கள். கமலின் அதீத கவனத்திற்கு ஒரு எடுத்து காட்டு, அந்த போலீஸ்காரர் மனைவி train இல் மதுரை செல்வார், அப்டி போகும் வழியில் கணவனிடம் பேசி கொண்டே செல்வார், அப்போது அந்த பெண்ணை கவனித்தால், கமல் எவ்வளவு சிரத்தை எடுத்து படம் எடுக்கிறார் என்பது விளங்கும். அந்த பெண்ணின் கூந்தல் ஒவ்வொரு முறை தொலை பேசியில் பேசும்போது , முன்பிருந்ததைவிட அதிகமாக களைந்து இருக்கும், அவரும் சோர்ந்து தென்படுவார் . அடடா , பயண களைப்பை காட்டி அவர் உண்மையிலேயே மதுரை செல்கிறாரோ என்ற பிம்பத்தை ஏற்படுத்துவார் !!!! பிரமாதம் Sir !!!!

ஆனாலும், Best Bakery சம்பவத்தையும் , கோயம்புத்தூர் சம்பவத்தையும் Mix பண்னி சொதப்பிடிங்கலே !!!! அதே சமயம், பல பேரு நீங்க தமிழ் ல பேச ஆரம்பிச்ச உடனே கை தட்டுறாங்கலம், பாவம் படத்துல அவ்ளோ தமிழ் வறட்சி !!!!! யாராச்சும் படத்த தமிழ் ல Dub பண்னி போட்டா நல்லா இருக்கும்.

அவ்ளோதாங்க , +2 பாஸ் பண்னி , டிகிரி வாங்கி இருந்தா படத்த முழுசா ரசிக்கலாம். இல்லேன்னா வாய மூடிட்டு Multiplex ல படத்த பாத்துட்டு , கூட்டதோட சேர்ந்து "Kamal's performance was awesome, excellent....he's a brilliant artist" அப்பிடின்னு பீலா வுட்டுட்டு போய்டுங்க !!!!

வணக்கம் !!!

Tuesday, October 6, 2009

முதல் பதிவு !!!!

வணக்கம் !!!! ரொம்ப நால்லா தமிழ் ல பினாதனும்னு ஆசை , என்னதான் ஆங்கிலத்துல BLOG எழுதுனாலும், தமிழ் ல கலாய்கிற சுகமே தனி !!!!

அதனால, எவன் படிச்சாலும் படிகாட்டியும் தமிழ் ல BLOG குரதுன்னு முடிவு பண்ணிட்டேன் !!!!

முக்காவாசி நான் பாத்து நொந்த படம், மனிதர்கள், சம்பவங்கள் ...இத பத்தி தான் எழுத போறேன் :)

கடைசியா, தமிழ் ல எழுதுறதுன்னு முடிவு பண்ணியாச்சு , ஆனா எந்த tool use பண்றதுன்னு தெரில்ல....யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா.

இலக்கண பிழை ...இலக்கிய பிழை எல்லாம் பாக்க கூடாது....ஜஸ்ட் மொக்கை அவ்ளோதான் !!!!!!!!!!!!!!!