Friday, March 26, 2010

GAPTAIN KARC - Part X

Gaptain KARC கிட்ட நேத்து சொன்னேன்: "நான் EXAMல 80 % எடுத்து இருக்கேன் " உடனே Gaptain KARC கேட்டாரு "பாஸ் ஆயட்டின்களா ?"

Friday, January 8, 2010

GAPTAIN KARC - Part IX

GAPTAIN KARC இன்னிக்கு சொன்ன தத்துவம்

எந்த போட்டியா இருந்தாலும் ஒன்னு FIRST வரணும் இல்லைனா LAST வரணும்...ஏன்னா இந்த ரெண்டு பேர பத்திதான் இந்த உலகமே பேசும் !!!!

பி.கு : சொன்ன தத்துவத்துக்கு ஏத்தாப்ல நம்ம ஆளு எப்பவுமே எந்த போட்டியா இருந்தாலும் கடைசியா தான் வருவாரு...

GAPTAIN KARC - Part VIII

GAPTAIN KARC ரொம்ப அதிசயமா சில சமயம் அடுத்தவங்களுக்கு புத்திசாலித்தனமா ரிவிட் அடிப்பாரு. இன்னிக்கு அப்பிடி அவருகிட்ட ரிவிட் வாங்கினது நம்ம ஸ்ரீகாந்த். எங்க கம்பெனில வெள்ளிகிழமை அப்பிடிங்குறது ரொம்பே விசேஷமான நாள். அன்னிக்கு மட்டும் எங்க கம்பனியே கலர்புல்லா இருக்கும். எல்லா வெள்ளிகிழமையும் கலர் பாத்துகிட்டேசாப்பிடுறது எங்களுக்கு ஒரு ஹாபி. இன்னிக்கு அப்பிடிதான் எல்லோரும் பாத்துட்டு இருந்தோம். நம்ம GAPTAIN ரொம்ப சீரியஸ்சா சைட் அடிச்சிட்டு இருந்தாரு...நடுவுள்ள புகுந்து நம்ம ஸ்ரீகாந்த் "என்ன GAPTAIN, இப்பிடி பாத்துட்டு இருக்கீங்க....தூக்கிடட்டுமா ?" (கண்டேன் காதலை ஸ்டைலில் கேட்டான்) அதுக்கு நம்ம GAPTAIN அதே சீரியஸ் முகத்தோட சொன்னாரு "தூக்கிட்டுவந்து என் ரூம்ல போட்ருப்பா "

அவ்ளோதான் , நானும் ரகுவும் இடி மாதிரி சிரிக்க ஆரம்பிச்சுட்டோம்..ஸ்ரீகாந்த் என்ன பண்றதுன்னு தெரியாம GAPTAIN அ வச்ச கண்ணு வாங்காம பேஸ்டு அடிச்சா மாதிரி பாத்துட்டு இருந்தான்....


GAPTAIN KARC - Part VII

GAPTAIN KARC வேலை பார்க்கும் முறையே ரொம்ப அலாதியானது. அவர் தான் எங்களோட CCD (கம்ப்யூட்டர்க்கு வயர் மாற்றவைங்க). அவர் கிட்ட கம்ப்யூட்டர் சம்பந்தமா எந்த பிரச்சனைன்னு போனாலும், முதல CASE ஓபன் பண்ண சொல்லுவாரு. அதுக்கப்புறம்தான் அவரு லீலைகள் ஆரம்பிக்கும். பசங்க கேஸ் ஓபன் பண்ணுனா 3 மணி நேரம் கழிச்சுதான் பாப்பாரு. அதே, எதாச்சும் பொண்ணு கேஸ் ஓபன் பண்ணுனா அடுத்த நிமிஷம் அவங்க cubicle ல இருபாரு....ஆனா என்ன பிரச்சனைனாலும் இவரு சொல்ற முதல் ஸ்டாண்டர்ட் டயலாக் " ree-start oor masine" (restart ur machine). இந்த ஒரே டயலாக்க 3 வருஷமா சொல்லி இங்க ஒப்பேத்திகிட்டு இருக்காறு....

இதே மாதிரி அவரு இன்னொரு விஷயம் பண்ணுவாரு....அது...
ஒருத்தர் pager வேணும்னு கேட்டாரு..
Mr .X : GAPTAIN , எனக்கு pager வேணும்.
Gaptain : கேஸ் ஓபன் பண்ணுங்க...
Mr .X கேஸ் ஓபன் பண்ணுனாரு , அடுத்த பத்தாவது நிமிஷம் கேஸ்ல "STOCK NOT AVAILABLE" அப்பிடின்னு எழுதி க்ளோஸ் பண்ணிட்டாரு...

Mr .X செம டென்ஷன் ஆய்டாறு....அவரு விட்ட கமெண்ட் "இந்த ஆளு PAGER இல்லேன்னா வாய்ல சொல்லி இருக்கலாம்ல, என்ன £$%@@#@ கேஸ் ஓபன் பண்ண சொன்னாரு ????? எனக்கு இந்த பல்பு தேவையா ????"

போலீஸ் ஸ்டேஷன்ல போலி கேஸ் எழுதுறதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு !!!!!

Thursday, January 7, 2010

GAPTAIN KARC - Part VI

இது இப்போ ஒரு 5 mins முன்னாடி நடந்தது....

நான்: GAPTAIN, இந்த blog பத்தி எல்லோர்டையும் சொல்லிடிங்களா????
GAPTAIN : நான் எதுக்குயா சொல்லணும் ????
நான்: உங்கள பத்தி தான எழுதுறேன்....
GAPTAIN : அதனால என்ன ...நீங்க தானய்யா POSTER , நீங்கதான் போய் எல்லோர்டையும் சொல்லணும் !!!!

பாத்துக்குங்க BLOG எழுதுற மக்களே, நீங்க எல்லாம் POSTERஆம் !!!!! சொல்லிடாரு நம்ம GAPTAIN ..........

GAPTAIN KARC - Part V

நம்ம GAPTAIN KARC , captain விஜயகாந்துக்கே சவால் விடுற அளவுக்கு ஆங்கில புலமை உடையவர். இப்பிடித்தான் ஒரு நாள்:

என் cubicle வாஸ்து சரி இல்லாதா காரணத்துனால இடம் மாத்துனேன். இந்த மாதிரி இட மாற்றம் நடக்குறப்போ GAPTAIN KARC இல்லாம ஒன்னும் கிழிக்க முடியாது. அதானால, அவரு உதவியோட ஜக ஜோரா இடம் மாறினேன். பழைய இடத்துக்கு பக்கதுல தான் நம்ம ஷம்மு cubicle. அந்த ஆளுக்கு இந்த விஷயம் தெரியாது, அதனால பொறுப்பா நம்ம GAPTAIN போய் அவருகிட்ட விஷயத்த சொன்னாரு...எப்பிடி தெரியுமா ?????

GAPTAIN KARC: யோவ் ஷம்மு, நீங்க இனிமே ஸ்ரீனிய பாக்க இங்க வர முடியாது...
ஷம்மு: ஏன் GAPTAIN ????
GAPTAIN KARC: ஏன்னா , அவரு "மூட்" ஆய்டாரு....
ஷம்மு: என்னையா சொல்ற ????
GAPTAIN KARC : ஆமாங்க, அவரு இந்த இடத்துல இருந்து அந்த பக்கம் "மூட்" ஆய்டாரு !!!!!

அதாகப்பட்டது, நம்ம GAPTAIN KARC, "moved" அப்பிடின்குற ஆங்கில வார்த்தையத்தான், கொஞ்சம் தமிழ் படுத்தி "மூட்" நு சொல்லிடாரு!!!!!

எனக்குதான், ரெண்டு நாலு எவன் மூஞ்சிலயும் முழிக்க முடில்ல...

GAPTAIN KARC - Part IV

நம்ம GAPTAIN KARC ஒரு கலககாரர்னு சொல்லி இருக்கேன்ல, திடிர்னு எதாச்சும் சொல்லி நம்மள டென்சன் பண்ணிட்டு போய்டுவாரு. இப்பிடித்தான்,எங்க gang ல ஷம்மு-நு ஒரு நல்லவர் (நிஜமாவே நல்ல மனுஷன்). அவரு அதிசயமா ஒரு புள்ளைய புடிச்சு இருக்குன்னு சொன்னாரு. பட்டாம்பூச்சி பறக்குற பீலிங்க்ஸ்ல இருந்தாரு. ரகசியமா, ரொம்ப தீவிரமா சைட் அடிச்சிட்டு இருந்தாரு. இத கேள்வி பட்ட நம்ம GAPTAIN KARC என்ன பண்ணுனாருதெரியுமா ??????

திடிர்னு ஷம்மு cubicle போய், "யோவ் ஷம்மு, அந்த புள்ளைகிட்ட என்ன இருக்குன்னு நீங்க சைட் அடிச்சிட்டு இருகிங்கன்னு தெரிஞ்சுக்க நானும் அந்த புள்ளைய பாத்தேன்.....எனக்கும் ரொம்ப புடிச்சு போச்சு...நான் லவ் பண்ண போறேன்..."

அவ்ளோதான், ஷம்மு தலைல இடி விழுந்த மாதிரி , கண்ணுல தண்ணி வச்சுக்கிட்டு எங்க கிட்ட சொல்லி பைசல் பண்றதுக்கு வந்தாரு, சரின்னு கிளம்பி போய் GAPTAIN KARC கிட்ட கேட்டோம். ஒரு ரவுண்டு ஏறுனோம் எல்லோரும், அபிடியே ஜகா வாங்கிட்டு சொன்னாரு பாருங்க "சரி விடுங்கப்பா, நான் ஷம்முக்கு விட்டு கொடுத்துடுறேன் !!!!!! "

அவரு அந்த பொண்ண புடிச்சு இருக்குன்னு சொன்னதைவிட இப்ப சொன்னத கேட்டு ஷம்மு வாழ்கையே வெருதுட்டாறு !!!!!