Wednesday, October 7, 2009

உன்னை போல் ஒருவன் : தமிங்க்லிஷ் திரைபட விமர்சனம்

பல பேரு இந்த படத்த பத்தி பேசிட்டாங்க , எழுதிட்டாங்க, படமும் கிட்ட தட்ட வெற்றியடைஞ்சிடுசு, இதுக்கப்புறமும் ஒருத்தன் விமர்சனம் பண்ண வரான்னா அவன நீங்க எல்லோரும் பாராட்டித்தான் ஆகணும். அது வேற யாரும் இல்ல, நாந்தானுங்கோ !!!!!!!! (Build-up மட்டும் இல்லேன்னா நம்மள DOG கூட திரும்பி பாக்காது )

ஹிந்தி படத்தை காட்டிலும் Making ல கலக்கிட்டாங்க , மத்தபடி ஹிந்தி படத்துல வந்த தாக்கம் இதுல சுத்தமா இல்ல. அந்த படத்துல Nasurudeen shah என்னும் சாதரண மனிதன், அவன் கோவம், அதுதான் தெரிஞ்சுச்சு. ஆனா தமிழ் ல கமல் என்னும் "Lord" லபக்குதாஸ் தான் தெரிஞ்சாரு. கமலின் நான் பெரிய வெண்கலம் என்று சொல்லும் மற்றுமொரு படமாகத்தான் தெரிந்ததே தவிர, படத்தின் theme வெளிப்பட்ட மாதிரி தெரில்ல. இந்த படத்துக்கு Perfect Casting என்று பார்த்தால் பசுபதி as Common Man சரியாய் இருந்து இருக்கும்.

Apart from that, படம் உண்மையிலேயே மிரட்டி இருகிறார்கள். RED ONE கேமரா கொண்டு புகுந்து விளையாடி இருகிறார்கள். கமலின் அதீத கவனத்திற்கு ஒரு எடுத்து காட்டு, அந்த போலீஸ்காரர் மனைவி train இல் மதுரை செல்வார், அப்டி போகும் வழியில் கணவனிடம் பேசி கொண்டே செல்வார், அப்போது அந்த பெண்ணை கவனித்தால், கமல் எவ்வளவு சிரத்தை எடுத்து படம் எடுக்கிறார் என்பது விளங்கும். அந்த பெண்ணின் கூந்தல் ஒவ்வொரு முறை தொலை பேசியில் பேசும்போது , முன்பிருந்ததைவிட அதிகமாக களைந்து இருக்கும், அவரும் சோர்ந்து தென்படுவார் . அடடா , பயண களைப்பை காட்டி அவர் உண்மையிலேயே மதுரை செல்கிறாரோ என்ற பிம்பத்தை ஏற்படுத்துவார் !!!! பிரமாதம் Sir !!!!

ஆனாலும், Best Bakery சம்பவத்தையும் , கோயம்புத்தூர் சம்பவத்தையும் Mix பண்னி சொதப்பிடிங்கலே !!!! அதே சமயம், பல பேரு நீங்க தமிழ் ல பேச ஆரம்பிச்ச உடனே கை தட்டுறாங்கலம், பாவம் படத்துல அவ்ளோ தமிழ் வறட்சி !!!!! யாராச்சும் படத்த தமிழ் ல Dub பண்னி போட்டா நல்லா இருக்கும்.

அவ்ளோதாங்க , +2 பாஸ் பண்னி , டிகிரி வாங்கி இருந்தா படத்த முழுசா ரசிக்கலாம். இல்லேன்னா வாய மூடிட்டு Multiplex ல படத்த பாத்துட்டு , கூட்டதோட சேர்ந்து "Kamal's performance was awesome, excellent....he's a brilliant artist" அப்பிடின்னு பீலா வுட்டுட்டு போய்டுங்க !!!!

வணக்கம் !!!

No comments:

Post a Comment