Monday, January 4, 2010

GAPTAIN KARC

வணக்கமுங்கோ.... English ல எழுதி எழுதி கடுப்பாகி, தமிழ் ல எழுதலாம்னு ஒரு blog ஆரம்பிச்ச, நம்ம நேரத்துக்கு ஆபீஸ் ல வேலை வெளுத்து வாங்கிட்டாயங்க. அதானால இந்த வருஷத்துல இருண்டு volunteer ஆ எந்த வேலையும் பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

------

ஒரு புது கேரக்டர் அறிமுகம் பண்ணலாம்னு இருக்கேங்க, அவரு பேரு GAPTAIN KARC , என்னடா வித்தியாசமான பேரா இருக்கேன்னு பாக்குறிங்களா ? தலைவரோட நிஜ பேரு கார்த்தி தான், ஆனாலும் அவரு ஒரு முறை எங்க team கு captain நா இருந்த காரணத்துக்காக இந்த பெயர். சரி matterku வருவோம், first கேரக்டர் intro:
1) 6 அடி உயரம், ஆனா போஸ்ட் மரம் மாதிரி உடல் வாகு.
2) தீவிரமான விஜய் பக்தர். (அதாங்க, DR.விஜய்)
3) சரியான கலகக்காரர். இவரோட speciality சம்பந்தமே இல்லமா ஒரு கருத்த சொல்லிடு silent ஆயடுவாறு, நாம மண்டைய பிச்சுகிட்டு உக்காந்து இருக்கனும்.
4 ) கடைசியா, ரெண்டு பீர் குடிக்கிற அளவுக்கு தெம்பான ஆளு.....

இப்போதைக்கு இது போதும், ஒரு sample சொல்றேன் கேளுங்க:

ஷண்முகா என்னும் நண்பர் onsite போகும் பொது, treat குடுத்தார். அவர் சரியான சாமியார், அதனால சரக்கு வாங்கி தர மாட்டேன் என்று ஒரே பிடிவாதம். சரி, கேட்கட்டும் போ அப்பிடின்னு விடவும் முடில்ல, நம்ம GAPTAIN KARC கூட்டிகிட்டு ஆளுக்கு 2 பீர் சாத்திட்டு வந்தோம், செலவு 400 பக்ஸ் , அதையும் நானே செட்டில் பண்ணிட்டு வந்தேன். வகை வகையா சாப்டோம், (food)பில் settle பண்ணிட்டு ஷண்முகா வந்தாரு . திடீர் ஞானோதயமா அவரே, சரக்கு எவ்ளோ ஆச்சுன்னு கேட்டாரு. ரெண்டு பெருகும் சேர்த்து 400 பக்ஸ் அபிடின்னு சொன்னேன். உடனே 400 ரூபா குடுத்தாரு, எனக்கு ஒரே ஆனந்தம். இதுஎல்லாத்தையும் ஒரு 5 அடி gap ல நின்னு பாத்துட்டு இருந்த GAPTAIN KARC திடிர்னு முன்னாடி வந்து

"இதெல்லாம் அநியாயம், நான் பாதி சரக்கு அடிச்சேன், எனக்கு பாதி காசு குடுங்க "

செம காண்டு ஆய்ட்டேன் நானு, அஞ்சப்பர் வாசல பீடா கடை போட்ருகுறவன் கூட விழுந்து விழுந்து சிரிச்சான் !!!!!
----------

தொடர்ந்து வருவாரு நம்ம
GAPTAIN KARC

1 comment:

  1. //சரியான கலகக்காரர்.//

    நம்பிட்டேன்!

    ReplyDelete