Thursday, January 7, 2010

GAPTAIN KARC - Part V

நம்ம GAPTAIN KARC , captain விஜயகாந்துக்கே சவால் விடுற அளவுக்கு ஆங்கில புலமை உடையவர். இப்பிடித்தான் ஒரு நாள்:

என் cubicle வாஸ்து சரி இல்லாதா காரணத்துனால இடம் மாத்துனேன். இந்த மாதிரி இட மாற்றம் நடக்குறப்போ GAPTAIN KARC இல்லாம ஒன்னும் கிழிக்க முடியாது. அதானால, அவரு உதவியோட ஜக ஜோரா இடம் மாறினேன். பழைய இடத்துக்கு பக்கதுல தான் நம்ம ஷம்மு cubicle. அந்த ஆளுக்கு இந்த விஷயம் தெரியாது, அதனால பொறுப்பா நம்ம GAPTAIN போய் அவருகிட்ட விஷயத்த சொன்னாரு...எப்பிடி தெரியுமா ?????

GAPTAIN KARC: யோவ் ஷம்மு, நீங்க இனிமே ஸ்ரீனிய பாக்க இங்க வர முடியாது...
ஷம்மு: ஏன் GAPTAIN ????
GAPTAIN KARC: ஏன்னா , அவரு "மூட்" ஆய்டாரு....
ஷம்மு: என்னையா சொல்ற ????
GAPTAIN KARC : ஆமாங்க, அவரு இந்த இடத்துல இருந்து அந்த பக்கம் "மூட்" ஆய்டாரு !!!!!

அதாகப்பட்டது, நம்ம GAPTAIN KARC, "moved" அப்பிடின்குற ஆங்கில வார்த்தையத்தான், கொஞ்சம் தமிழ் படுத்தி "மூட்" நு சொல்லிடாரு!!!!!

எனக்குதான், ரெண்டு நாலு எவன் மூஞ்சிலயும் முழிக்க முடில்ல...

No comments:

Post a Comment