Friday, January 8, 2010

GAPTAIN KARC - Part VII

GAPTAIN KARC வேலை பார்க்கும் முறையே ரொம்ப அலாதியானது. அவர் தான் எங்களோட CCD (கம்ப்யூட்டர்க்கு வயர் மாற்றவைங்க). அவர் கிட்ட கம்ப்யூட்டர் சம்பந்தமா எந்த பிரச்சனைன்னு போனாலும், முதல CASE ஓபன் பண்ண சொல்லுவாரு. அதுக்கப்புறம்தான் அவரு லீலைகள் ஆரம்பிக்கும். பசங்க கேஸ் ஓபன் பண்ணுனா 3 மணி நேரம் கழிச்சுதான் பாப்பாரு. அதே, எதாச்சும் பொண்ணு கேஸ் ஓபன் பண்ணுனா அடுத்த நிமிஷம் அவங்க cubicle ல இருபாரு....ஆனா என்ன பிரச்சனைனாலும் இவரு சொல்ற முதல் ஸ்டாண்டர்ட் டயலாக் " ree-start oor masine" (restart ur machine). இந்த ஒரே டயலாக்க 3 வருஷமா சொல்லி இங்க ஒப்பேத்திகிட்டு இருக்காறு....

இதே மாதிரி அவரு இன்னொரு விஷயம் பண்ணுவாரு....அது...
ஒருத்தர் pager வேணும்னு கேட்டாரு..
Mr .X : GAPTAIN , எனக்கு pager வேணும்.
Gaptain : கேஸ் ஓபன் பண்ணுங்க...
Mr .X கேஸ் ஓபன் பண்ணுனாரு , அடுத்த பத்தாவது நிமிஷம் கேஸ்ல "STOCK NOT AVAILABLE" அப்பிடின்னு எழுதி க்ளோஸ் பண்ணிட்டாரு...

Mr .X செம டென்ஷன் ஆய்டாறு....அவரு விட்ட கமெண்ட் "இந்த ஆளு PAGER இல்லேன்னா வாய்ல சொல்லி இருக்கலாம்ல, என்ன £$%@@#@ கேஸ் ஓபன் பண்ண சொன்னாரு ????? எனக்கு இந்த பல்பு தேவையா ????"

போலீஸ் ஸ்டேஷன்ல போலி கேஸ் எழுதுறதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு !!!!!

No comments:

Post a Comment